சுகாதார நிலையத்திற்கு விடிவு கிடைக்குமா ?- பொதுமக்கள் கேள்வி
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் கேசம்பட்டி ஊராட்சியில் உள்ள 7-கிராம மக்கள் மருத்துவ உதவி பெற்று வருகிறார்கள்.
சுகாதார நிலையத்தின் கட்டிடங்கள் பழுதாகி இடியும் நிலையில் இருந்தது. ஆபத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேசம்பட்டி சமுதாய கூடத்தில் கடந்த பல மாதங்களாக சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால், குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமமாக உள்ளது. இது குறித்து, கிராம சபைக் கூட்டங்களில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கததால் செடி, கொடிகள் அடர்ந்த புதர்களாக காணப்படுகிறது.
எனவே கேசம்பட்டி ஊராட்சி மக்களின் நலனை பாதுகாக்க இந்த தமிழ்நாடு அரசின் துணை சுகாதார நிலையத்தின் பழுதான கட்டிடங்களை இடித்து புதிதாக கட்டிடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கும், மருத்துவத்துறைக்கும் இப்பகுதி மக்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கின்றனர்.




கருத்துக்கள்