அதிமுகவில் ஓபிஎஸ்சை இணைக்க வாய்ப்பே இல்லை - இபிஎஸ் பேட்டி
ஜன. 29, 2026 10:44 முற்பகல் |
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலம் ஓமலூரில் அவர் அளித்த பேட்டியில், “ ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அதிமுகவில் ஒ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது என்பது பொதுக்குழு கூடி முடிவெடுத்தது.” என கூறினார்.
மேலும், இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். அது முடிவானதும் தொகுதி பங்கீடு பற்றி பேசுவோம். கூட்டணி விஷயத்தில் அதிமுக திட்டமிட்டு தெளிவாக செயலாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.




கருத்துக்கள்