கிருஷ்ணகிரி தம்பதிக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு - 8 பேர் கைது
சென்னை காசிமேடு பவர்குப்பம் 2-வது தெருவைச் சேர்ந்த சகாயராஜ் - திலகவதி தம்பதிக்கு ஏற்கனவே ஆண், பெண் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நான்காவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் பிறந்த குழந்தையை யாரிடமாவது விற்பனை செய்ய நினைத்த இத்தம்பதியினர் தண்டையர்பேட்டையைச் சேர்ந்த பிரதீபாவிடம் தெரிவித்துள்ளனர். அதோடு பிரதீபா, தனக்கு தெரிந்த காசிமேட்டைச் சேர்ந்த வெண்ணிலா, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கவுசல்யா ஆகியோருடன் ஆலோசனை செய்து குழந்தையை விற்க முடிவு செய்தனர்.அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தம்பதிக்கு குழந்தை தேவைப்படுவதை அறிந்து அவர்களிடம் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
இதில் 3 லட்சத்தை சகாயாராஜ்-திலகவதி தம்பதியினரிடம் கொடுத்துவிட்டு மீதி 80 ஆயிரம் ரூபாவை தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்.
இது குறித்து காசிமேடு காவல்துறையினருக்கு புகார் வந்ததையடுத்து விசாரணையில் இறஙகியவர்கள், சம்பவம் நடந்தததை உறுதி செய்த பின் திலகவதி, பிரதீபா உள்ளிட்ட நால்வரையும் கைது செய்து குழந்தைகள் நலக் குழுவினர் ஒப்படைத்தனர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கிருஷ்ணகிரி சென்று குழந்தையை வாங்கிய ராமன் - மாதம்மாள் தம்பதியினருடன், அவர்களுக்கு உதவிய கவிதா, ஜெயலட்சுமி ஆகியோரையும் கைது செய்து குழந்தையை மீட்டனர்.




கருத்துக்கள்