advertisement

தூத்துக்குடி சந்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

ஜன. 28, 2026 6:52 முற்பகல் |

தூத்துக்குடி சந்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசந்தி விநாயகர் திருக்கோவில் 10ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு 101 திருவிளக்கு பூைஜ நடைபெற்றது. மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக பஜனையுடன் கூடிய திருவிளக்கு பூஜையை ஜெயந்தி பொய்சொல்லான் தொடங்கி வைத்தாா். பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அணைவருக்கும் விநாயகா் சிலையை விகாசினி ராஜ்குமாா் வழங்கினாா். பின்னர் 28ம்தேதி கனபதிஹோமம், கோபூஜை, நடைபெற்றது. அதனை தொடர்ந்து பார்வதி அம்மன் கோவிலிருந்து பால்குடம் எடுத்தல், கும்பாபிஷேக தீபாராதனை நடைபெற்றன. இரவு மாவிளக்கு ஊர்வலமும், சந்தி விநாயகர் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. 

விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் மோகன். செயலாளர் ரமேஷ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், கௌரவ ஆலோசகர்கள் ராஜசபாிநாதன், சுப்ரமணி, உறுப்பினர்கள் மஹாராஜா மணிகண்டன், சந்தானராஜ், அமிர்தகணேசன், சிவா கந்தவேல், முருகேசன், செந்தில் ஆகியோர் செய்திருந்தனர். 
நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பிரதிநிதி ராஜ்குமாா், 1ம் கேட் காந்தி சிலை வட்டாரவியாபாாிகள் சங்கதுணை செயலாளர் வெங்கடேஷ், துணைத்தலைவர் முருகேசன், பொருளாளர் ரமேஷ், மற்றும் கந்தவேல் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement