advertisement

அதிமுக அமோக வெற்றி பெறும் : எஸ்.பி சண்முகநாதன்

ஜன. 28, 2026 6:29 முற்பகல் |

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் வீரவணக்க நாள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பேசினாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் அண்ணாநகர் சந்திப்பு டூவிபுரத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். அமைப்பு சாரா ஓட்டுநா் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் சுதாகர், பகுதி செயலாளர்கள் முருகன், சேவியா், சுடலை மணி, சந்தனப்பட்டு, மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் திருச்சிற்றம்பலம், மாணவரணி இணைச்செயலாளர்கள் தினேஷ், முத்துச்செல்வன், துணைத் தலைவர்கள் முகம்மது காலிப் உசேன், டேவிட் ஜெபசீலன், பொருளாளர் முத்துக்குமாா் துணைச்செயலாளர் ஈஸ்வா் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சிவரத்தினம் வரவேற்புரையாற்றினார். 

தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில் மொழிப்போர் என்ற காலம் இந்தியை எதிர்த்தும் தமிழ்மொழியை வளர்க்கும் விதமாக தியாகம் செய்து இறந்தவர்களுக்கு அதிமுக சார்பில் வீரவணக்கநாள் செலுத்தும் தகுதி பெற்றுள்ளது. அதிமுக ஆட்சி சிறப்பாக மக்களுக்கான திட்டத்தோடு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா, வழியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்தார். 
 2026ல் நடைபெறவுள்ள தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்ல கூட்டணியை அமைத்துள்ளாா். அவா் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். பிரதமா் மோடி மாநாடு போல் பொதுக்கூட்டம் நடத்தி தமிழகத்தில் என்டிஏ கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமிதான் தலைவா் என்று கூறிவிட்டாா். தினகரன் வரவு நமக்கு வலுசேர்த்துள்ளது. தெற்கு மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். 

அதற்கு அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து எம்.ஜி.ஆர் பிறந்தநாளன்று முதல்கட்ட தோ்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு 2000 ஆண்களுக்கும் இலவச பயணம் 25ஆயிரம் மாணியம் இருசக்கர வாகனத்திற்கு வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பது போன்றவைகளை வீடு தோறும் எடுத்துச்செல்ல வேண்டும். நான்காவது பைப் லைன் திட்டத்திற்கு 282 கோடி ெஜயலலிதா ஓதுக்கியதின் காரணமாக தூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம் இல்லை ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடிஓதுக்கீடு மூலம் தூத்துக்குடி வளர்ச்சிக்கு வித்திட்டவா் எடப்பாடி பழனிச்சாமி. இதையெல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பேசினாா். அமைப்பு செயலாளர் சீனிவாசன், தலைமை பேச்சாளா் கருணாநிதி, இளம் பேச்சாளர் வல்லரசு, ஆகியோா் சிறப்புரையாற்றினாா்கள். 

கூட்டத்தில் மாவட்ட அணி செயலாளர்கள் நடராஜன், பிரபாகர், பெருமாள், ராஜா, ஜுலியட், ஓன்றிய செயலாளர்கள் விஜயகுமாா், சௌந்திரபாண்டியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை கல்விகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்கள் முருகன், சத்யாலட்சுமணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் டைகர் சிவா, இலக்கிய அணி இணைச்செயலாளர் பொற்கிளி ஜான்சன் தேவராஜ், வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி, செங்குட்டுவன், சுகந்தன் ஆதித்தன், சரவணபெருமாள், தலைமை பேச்சாளர் முருகானந்தம், வட்டச்செயலாளர்கள் பூக்கடை வேலு, மனோகர், உலகநாத பெருமாள், கொம்பையா,ஈஸ்வரன், முன்னாள் கவுன்சிலர்கள் சாந்தி, மெஜிலா, ,  மாவட்ட பிரதிநிதி விஜயன், நிர்வாகிகள் பாலஜெயம், மைதீன், ஐடியல் பரமசிவம், மகளிர் அணி இந்திரா, ராஜேஸ்வரி, பானுமதி, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் அலெக்ஸ்ஜி நன்றியுரையாற்றினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement