advertisement

தூத்துக்குடி : உயிாிழந்த 3 போ் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கல்

ஜன. 28, 2026 5:17 முற்பகல் |

தூத்துக்குடி கடலில் முழ்கி உயிாிழந்்த 3 போ் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவித்தொகை வழங்கினாா்.

தூத்துக்குடி கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்தனர். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்து நகர் அருகே உள்ள கீதாஜீவன் நகரைச் சேர்ந்த கதிரேசன் மகன் முகேந்திரன் (12), அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில்  7ம் வகுப்பும், ஜாகிர் உசேன் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீ கார்த்திக் (13) 8ம் வகுப்பும் படித்து வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த வனராஜ் மகன் திருமணி (14) தூத்துக்குடியில் உள்ள பள்ளியில்  9ம் வகுப்பு  படித்து வந்தார்.  இந்நிலையில்  குடியரசு தினத்தை யொட்டி பள்ளி விடுமுறை என்பதால், இவர்களுடன் சேர்த்து மொத்தம் 9 பேர்  வீட்டில் கபடி விளையாடச் செல்வதாக கூறிவிட்டு, தாளமுத்து நகர், சிலுவைபட்டி அருகே உள்ள மொட்டை கோபுரம்  கடல் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது கடலில் ராட்சத அலை எழுந்ததாக  கூறப்படுகிறது.

இதனால் அருகில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் வெளியில் வந்து விட்டனராம்.  ஆழமான பகுதிக்கு சென்ற  4 பேர் சிக்கிய நிலையில், ஒரு மாணவரை அப்பகுதியில் நின்ற மீனவர் உடனடியாக மீட்டு உள்ளார். மற்ற மூன்று பேரும் திரும்பி வர முடியாமல் கடலில் தத்தளித்து தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்தனர்.  தகவல் அறிந்து வந்த தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மாணவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பாிசோதனை முடிந்து பெற்றோா்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் 3 லட்சம் நிவாரண உதவித்ெதாகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாா். அதன்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 போ் குடும்பத்தினரை நோில சந்தித்து ஆறுதல் கூறு பெற்றோா்களிடம் தலா 3 லட்சம் வீதம் தலா 9 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா்.
 
சண்முகையா எம்.எல்.ஏ, கோட்டாட்சியா் பிரபு, தாசில்தாா் திருமணிஸ்டாலின், ஒன்றிய செயலாளா்கள் இளையராஜா, சரவணக்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா் மணி,  தெற்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளா்கள் ராமஜெயம், வீரபாகு, ரவி என்ற பொன்பாண்டி, செல்வக்குமாா், ரகுராமன், ஜனகா், ராஜேந்திரன், மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், அந்தோணி தனுஷ்பாலன், ஓன்றிய அவைத்தலைவர்கள் சுப்பிரமணியன், ஜோதிடா் முருகன், துணைச்செயலாளர் கணேசன், ஓன்றிய வர்த்தக அணி ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி தா்மராஜ், கிளைச்செயலாளர்கள் பாரதிராஜா, முருகன், போஸ், ஜேசுராஜா, நெல்சன், பொன்னுச்சாமி, வருவாய் ஆய்வாளர் குமரன், கிராமநிர்வாக அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement