தொழில்முனைவோர் உருவாக்குவதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் தவப்புதல்வி சார்பில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொழிமுனைவோர் உருவாக்குவதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் நிறுவனர்கள், தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, கிராமப்புற பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.நிகழ்ச்சியிமுனைவர் சுபத்ரா செல்லத்துரை, திட்டத்தின் நோக்கங்கள், பெண்களின் பொருளாதார சுயநிறைவு அவசியம், மகளிர் தொழில்முனைவோரின் சமூக மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பங்களிப்பு ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார்.மேலும், மகளிர் தொழில்முனைவோருக்கான அரசு திட்டங்கள், வங்கி கடன் மற்றும் மானிய வாய்ப்புகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், CSR நிதி ஆதரவு மற்றும் NGO-களின் பங்களிப்பு குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல NGO அமைப்புகள், தவப்புதல்வி திட்டத்துடன் இணைந்து கிராமப்புற மகளிர் தொழில்முனைவோர்களை உருவாக்கும் பணியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தன.நிகழ்ச்சி கலந்துரையாடல், கருத்துப் பரிமாற்றம் மற்றும் எதிர்கால கூட்டாண்மைக்கான திட்டங்களுடன் நிறைவடைந்தது.





கருத்துக்கள்