நாகர்கோவில் : நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, CPIML விடுதலை மாவட்ட செயலாளர் சுசீலா தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தின் முக்கிய முழக்கங்கள்:நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்கு!மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும்!இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்:
எஸ். எம். அந்தோணி முத்து (CPIML நிலைக்குழு உறுப்பினர்)அல்காலித் (விடுதலை சிறுத்தைகள் கட்சி - கார்மல் (மாநில குழு உறுப்பினர்) அர்ஜுனன் (மாவட்ட குழு உறுப்பினர்) சகாய பிரின்ஸ் (மாநகர செயலாளர்) சூசை மரியான் (ரெட் ஸ்டார்) அனிதா பிரின்ஸி (மாவட்ட தலைவர்) மணவைக்கண்ணன் (அமைப்பின் மாவட்ட செயலாளர்) உள்ளிட்ட பலரும் திரளாகக் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.





கருத்துக்கள்