advertisement

பத்ம விருதுகள் - தூத்துக்குடி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஜூலை 28, 2026 10:56 முற்பகல் |

 


தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள் 2027-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசால் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், பொதுச்சேவை, விளையாட்டு உட்படப் பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த சாதனை புரிந்த தனிநபர்களுக்குப் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அந்த வகையில், விளையாட்டுத் துறையில்: பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், மலையேற்றம், விளையாட்டுத் துறையை மேம்படுத்தியவர்கள் மற்றும் ஊக்கப்படுத்தியவர்கள், பன்னாட்டு அளவிலான போட்டிகளைச் சிறப்பாக நடத்தியவர்கள், பன்னாட்டு அளவில் யோகா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள்ஆகிய சாதனையாளர்களுக்கு 2027-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை படைத்த தகுதியான நபர்கள், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான awards.gov.in வாயிலாக விண்ணப்பங்களைப் பெற்று, வரும் 31.07.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement