advertisement

தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

ஜூலை 27, 2026 9:50 முற்பகல் |

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி, 11-ம் திருநாளான நாளை (28-7-2026) நடைபெறுகிறது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடித்தபசு விழாவில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு நாளை (28-7-2026) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு தேர்வுகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வேலைநாளாக பின்பற்றப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement