தூத்துக்குடி : ஆக 1 ல் மாவட்ட ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படவுள்ள மாவட்டங்களுக்கு இடையேயான 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட அணி வீரர்கள் தேர்வு, வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள 'சான்சான் கிரிக்கெட் அகாடமி' பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு இத்தேர்வு நடைபெறும். 23 வயதுக்குட்பட்ட இத்தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் 01.09.2003 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ, 31.08.2012-க்கு முன்பாகவோ பிறந்திருக்க வேண்டும்.
தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் வெள்ளை நிறக் கிரிக்கெட் சீருடை (Cricket Whites) மற்றும் தங்களது விளையாட்டு உபகரணங்களுடன் வர வேண்டும். அடையாளச் சான்றின் நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் (PDF பிடிஎப் வடிவில்) வைத்திருக்க வேண்டும்.
தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் வீரர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கூகுள் படிவத்தின் (Google Form) வழியாகத் தங்களது பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
இத்தேர்வில் தேர்வாகும் வீரர்கள் அனைவருக்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும், அவர்கள் வரும் செப்டம்பர் 2026-இல் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாவட்டங்களுக்கு இடையேயான போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியின் சார்பில் பங்கேற்பார்கள் என்றும் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் கிறிஸ்பின் தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்