advertisement

கோவில்பட்டி வீரர் காமன்வெல்த் போட்டியில் சாதனை - கனிமொழி வாழ்த்து

ஜூலை 27, 2026 6:03 முற்பகல் |

 

ஸ்காட்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள கோவில்பட்டி வீரருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் சர்வதேச காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி, திறம்படச் செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து கனிமொழி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்: "ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.அவர் விளையாட்டுத் துறையில் மேன்மேலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து, மிகப்பெரிய உயரங்களை அடைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement