advertisement

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு உயர்வு

ஜூலை 27, 2026 5:57 முற்பகல் |

 

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் என்பவர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பட்டாசு வெடிவிபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூலை 26) காலையில் அந்த பட்டாசு குடோனில் ராம் பிரசாத் உள்ளிட்ட 5 பேர் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த குடோனில் இருந்த பட்டாசில் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனையடுத்து அங்கிருந்த மற்ற பட்டாசுகளும் வெடித்து சிதற தொடங்கின. அதில், பட்டாசு தயாரிக்க அமைக்கப்பட்டிருந்த தகர செட்டுகள் முழுவதும் வெடித்து தரைமட்டமானது.

தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், இந்த விபத்தில் உரிமையாளர் ராம் பிரகாஷ் (32) இன்னாசி முத்து (44) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர், பணி புரிந்த மூன்று தொழிலாளர்களை தேடு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராமச்சந்திரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து, ஐயப்பராஜா (37) பாண்டித்துரை (35) ஆகிய இருவரையும் தேடும் பணி நடைபெற்றது.சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர்களது உடல் பாகங்களும் சிதறிய நிலையில் மீட்கப்பட்டன. அதனால், நேற்று மொத்தம் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

உயிரிழந்தவர்களின் விவரம்

ராம் பிரகாஷ்(32) , செங்கமலப்பட்டி இன்னாசி முத்து (44) , மீனம்பட்டி ஐயப்பராஜ் (37) மீனம்பட்டி
பாண்டித்துரை (35) நாரணாபுரம்இதுபோன்ற சூழலில், படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் (39) என்பவர் இன்று (ஜூலை 27) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement