தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்த்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குதல், மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் இதர கோரிக்கைகள் அடங்கிய 516 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில் அவர்களிடம் இருந்து 23 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளை ஆட்சியர் நேரில் சந்தித்துப் பெற்ற 47 மனுக்களும் என மொத்தம் 586 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கூட்டத்தின் ஒரு பகுதியாக 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்குத் தலா ரூ.15,250 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை (ரூ.30,500 மொத்த மதிப்பில்) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் ரமணன்,உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.





கருத்துக்கள்