advertisement

தூத்துக்குடி வந்த ஆளுநருக்கு ஆட்சியர் வரவேற்பு

ஜூலை 28, 2026 6:43 முற்பகல் |

 

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகத் தூத்துக்குடி வந்தடைந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் புத்தகங்களை வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தார்.

திருநெல்வேலி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று (28.07.2026) தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த அவருக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் புத்தகம் வழங்கி முறைப்படி வரவேற்பு அளித்தார்.இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு ஆளுநருக்குத் தகுந்த மரியாதை மற்றும் வரவேற்பை அளித்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement