advertisement

தூத்துக்குடி : கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ஜூலை 29, 2026 1:56 முற்பகல் |

 

நாலாட்டின்புதூர் அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் கைதான இரண்டு பேருக்குத் தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர்   செண்பகப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் (25). இவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (26) மற்றும் மதன் (24) ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நாலாட்டின்புதூர் காவல்துறையினர், சதீஷ் மற்றும் மதனை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட பி.சி.ஆர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், நீதிபதி வசீத்குமார் நேற்று (28.07.2026) தீர்ப்பளித்தார். அதில், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், சதீஷ் மற்றும் மதன் ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக உறுதி செய்து, அவர்களுக்குத் தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 20,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement