அண்ணாமலை உட்பட 3 பேர் மீது, மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு..!
கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரை பாண்டிக்கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டு, வழிபாடுகள் அங்கு நடந்து வந்தன. அங்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து தரிசித்து சென்றார்கள்.
அத்துடன், முருக பக்தர்கள் மாநாட்டு மேடை திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாக வைத்தும், அதில் முருகப்பெருமான் படத்துடன், அறுபடை வீடுகளின் கோபுரங்களும் இடம்பெறுவது போன்றும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், அண்ணாமலை மீது மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட 04 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் புகார் அளித்ததன் பேரில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், இந்து முன்னணி நிர்வாகி செல்வகுமார் உட்பட 03 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்கள்