advertisement

தஞ்சை : குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

ஜூலை 12, 2025 8:09 முற்பகல் |

தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடி ஊரணி குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது உள்ளூர் மக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதவன் (10), பாலமுருகன் (10), ஜஸ்வந்த் (8) ஆகிய மூவரும் பள்ளி முடிந்ததும், வீடு செல்லாமல் நண்பர்களாக இணைந்து குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

வீட்டிற்கு நேரத்தில் வராததால், சிறுவர்களின் பெற்றோர் கவலையுடன் தேடத் தொடங்கினர். மருதகுடியில் சென்றனர் என்ற தகவலைத் தொடர்ந்து, அவர்கள் ஊரணி குளத்திற்குச் சென்றபோது, குளத்தின் கரையில் குழந்தைகளின் செருப்புகள் மட்டுமே கண்ணில் பட்டது. இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி தேட முயற்சி செய்தனர். சில நிமிடங்களில் மூவரும் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாலும், மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக உறுதி செய்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement