எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி கூட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி கூட்டம் தொகுதி தலைவர் சலீம் தீன் தலைமையில் மேலப்பாளையம் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது
தொகுதி துணை தலைவர் ஜவுளி காதர் வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் வரும் திங்கள் இரவு அனைத்து நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடத்துவது,45 வது வார்டு வாவர் பள்ளி அருகில் கழிவு நீர் கால்வாய் தோண்டப்பட்டு நீண்ட நாட்கள் பணிகள் நடைபெறாமல் உள்ளது அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள், சிறுவர் பள்ளி ஆட்டோ, முதியவர்கள் உபயோகப்படுத்தும் பாதை என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பணிகளை துவங்க வேண்டும்,மாட்டு சந்தை அருகில் பத்திமா நகர்,மதினா நகர்,அல்அமீன் நகர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது இவர்களுக்கு பேருந்து திருத்தம் பாத்திமா நகர்
அருகில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் சலீம் தீன், ஜவுளி காதர்,காதர் மீரான்,மூசா காஜா,கே.கே.காஜா கலந்து கொண்டனர் இறுதியாக பொருளாளர் கே.கே.காஜா நன்றி உரை ஆற்றினார்.
கருத்துக்கள்