மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்-முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி
மார். 07, 2026 8:11 முற்பகல் |
முதல்அமைச்சர் ஸ்டாலின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை சாலோம் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான ஏ எல் எஸ் லட்சுமணன் கலந்து கொண்டு முதியோர்களுக்கு மதிய உணவினை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, மாநகர பிரதிநிதி தாடி லட்சுமணன், 12வது வார்டு வட்ட செயலாளர் மேகை செல்வம்,உட்பட பலர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொருளாளர் வண்ணை சேகர் செய்திருந்தார்.





கருத்துக்கள்