ஸ்காட் கல்வி குழும நிறுவனருக்கு 'எஜுகேஷன் மேக்கர்' விருது - அமைச்சர் பி.டி.ஆர் வழங்கல்
தமிழக அரசின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அகாடமி சார்பில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபுவுக்கு 'எஜுகேஷன் மேக்கர்' விருதினை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் கிளிட்டஸ் பாபுவுக்கு 'எஜுகேஷன் சேன்ஜ் மேக்கர்' விருதை தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.தென் தமிழகத்தில் ஸ்காட் கல்வி குழுமங்களான எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி, ஸ்காட் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி, மதர் தெரசா பொறியியல் கல்லூரி, எப்.எக்ஸ். பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப கல்வியில், இன்றய நவீன காலகட்டத்திற்கேற்ப தொழில்நுட்ப பாடத்திட்டத்தில் புதிய கல்வி மாற்றம், திறன் பயிற்சிகள். படிக்கும்போதே வேலைவாய்ப்பு, பன்னாட்டு நிறுவனங்களில் இடம் பெற்ற நவீன ஆய்வகங்கள் போன்றவற்றில் பயிற்சி உள்ளிட்ட சிறந்த அம்சங்களை நிறுவனர் கிளிட்டஸ் பாபு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
இதன் மூலம் ஏழை, எளிய நடுத்தரவர்க்க மாணவர்களுக்கு சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதன் காரணமாக, அவர் 'கற்றல் விருது' பெற்றுள்ளார். இதனையடுத்து, தமிழக அரசின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அகாடமி சார்பில் மதுரையில் நடைபெற்ற விழாவில் 'எஜுகேஷன் சேன்ஜ் மேக்கர்' விருது கிளிட்டஸ் பாபு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விருதை தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களிடமிருந்து ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் கிளிட்டஸ் பாபு சார்பாக நிர்வாக இயக்குநர் அருண்பாபு பெற்றுக்கொண்டார்.
அந்த விருதில், 'புதுமையான சிந்தனைகள், தொலைநோக்கு தலைமைத்துவம் மூலம் கல்வியை மாற்றியமைப்பதற்கான உங்கள் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் உத்வேகமான மாற்றத்திற்கான அர்ப்பணிப்பு, உங்கள் முயற்சிகள் கற்றலின் எதிர்காலத்தை கணிசமாக வடிவமைத்து, கல்வியை மிகவும் பயனுள்ளதாகவும், முன்னோக்கிச் சிந்திக்கவும் செய்கிறது என்று நிறுவனர் கிளிட்டஸ் பாபு பற்றி பாராட்டி குறிப்பிடப்பட்டுள்ளது.





கருத்துக்கள்