தூத்துக்குடி மாவட்ட மாணவர்களின் தொடர் வெற்றி
தூத்துக்குடி மாணவர்கள், சென்னையில் , தமிழ்நாடு எறிபந்து சங்கம் சார்பில் நடத்திய போட்டிகளில் , 15 வயதிற்குட்பட்டோருக்கான 20வது சப் ஜூனியர் எறிபந்து விளையாட்டுப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் வகித்து வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் எட்டாம் வகுப்பு பயிலும். அகிலேஷ் , தமிழ் நாட்டின் சிறந்த எறிபந்து வீரர் எனும் பட்டத்தை வென்று நம் மாவட்டத்தை பெருமை சேர்த்துள்ளார்.வெற்றி பெற்ற இம்மாணவர்களையும் , இவ்வெற்றிக்காய் அரும்பாடுபட்டு உழைத்த விளையாட்டு ஆசிரியர் இசக்கி துரை அவர்களையும் தூத்துக்குடி மாவட்ட எறிபந்து சங்கத்தினர்,பெற்றோர்களும் பொதுமக்களும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.இது போன்று மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதை உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னெடுத்து ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துக்கள்