தூத்துக்குடியில் நடப்போம் நலம்பெறுவோம் விழிப்புணா்வு நடைபயிற்சி
தூத்துக்குடியில், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நடப்போம் நலம்பெறுவோம் விழிப்புணர்வு நடைபயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் முத்துநகா் கடற்கரையிலிருந்து மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் மருத்துவதுறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மாநகராட்சி சுகாதார துறை பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் முத்துநகா் கடற்கரையிலிருந்து நடைபயணமாக கடற்கரை சாலை, மாதா கோவில், விளையாட்டு மைதானம், தெற்கு காட்டன்ரோடு, வஉசி சாலை, விஇ சாலை, காய்கனிமாா்க்கெட் அண்ணாசிலை, புதிய மாநகராட்சி, பழைய பஸ்ஸ்டாண்ட, வஉசி சாலை, டபிள்யுஜி சாலை, பழைய மாநகராட்சி வழியாக மீண்டும் கடற்கரை சாலை வழியாக முத்துநகா் கடற்கரையை சென்றடைந்தது.
8.6 கிலோமீட்டர் நடைபயணமாக மேற்கொண்டது குறித்து மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் "ஏற்கனவே தமிழக அரசின் சாா்பில் ரோச்பூங்கா கடற்கரை சாலை முழுமையாக தூய்மையான பகுதியாக தேர்வு செய்யப்பட்டு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அதை தொடங்கி வைத்து நடைபயணம் மேற்கொண்டாா்.
நடைபயிற்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டர் யாழினி, மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், நகா்நல அலுவலர் சரோஜா, கவுன்சிலர்கள் இசக்கிராஜா, சந்திரபோஸ், சுகாதார ஆய்வாளா் வில்சன், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
கருத்துக்கள்