இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல் : தூத்துக்குடியில் ஒருவர் கைது!
மே 06, 2025 5:56 முற்பகல் |
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த 1540 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் போலீசார் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து செல்லும் போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில், பீடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதற்க்கு எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த தாளமுத்துநகர் சோட்டையன் தோப்பு அருகில் பூபாண்டியபுரம் 2வது தெரு ராஜா மகன் சடைய மாரியப்பன் (23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 1540 கிலோ பீடி இலைகளுடன் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கருத்துக்கள்