திருச்செந்தூர் குடமுழுக்கு திருவிழாவை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்!
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வருகிற 7ஆம் தேதி நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு நெல்லை திருச்செந்தூர் இடையே வருகிற 7ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி திருநெல்வேலி-திருச்செந்தூர் சிறப்பு பயணிகள் ரயில் வண்டி எண் 06101 திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
அதே போல் மறு மார்க்கத்தில், சிறப்பு பயணிகள் ரயில் வண்டி எண் 06102 காலை 11.20 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மதியம் 12.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், குரும்பூர், ஆறுமுகநேரி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கருத்துக்கள்