கோவில்பட்டியில் தரமின்றி அமைக்கப்படும் வாறுகால் - பொதுமக்கள் புகார்
ஜூலை 02, 2025 4:09 முற்பகல் |
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் மூன்றாவது தெரு பகுதியில் அமைக்கப்படும் வாறுகால் தரம் இல்லாமல் அமைக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஏற்கனவே நேற்று அமைக்கப்பட்ட வாறுகால் பகுதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அது அடித்துச் செல்லப்பட்டதாகவும்.. அதனை சரிகட்டும் வகையில் இன்றைக்கு சரியான முறையில் வாறுகால் அமைக்காமல் பெயரளவிற்கு பணிகள் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே தயவு கூர்ந்து அதனை ஆய்வு செய்து தரமாக வாறுகால் அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கருத்துக்கள்