advertisement

சேர்வைக்காரன்மடத்தில் பரவிய தீயை அணைக்க உடனடி நடவடிக்கை- சண்முகையா எம்எல்ஏ.வுக்கு பொதுமக்கள் பாராட்டு

ஜூலை 02, 2025 5:52 முற்பகல் |

சேர்வைக்காரன்மடம் நம்மாழ்வார் நகர் தேரி தோட்ட  பகுதியில் பரவிய தீயை அணைக்க உடனடி நடவடிக்கை எடுத்த சண்முகையா  எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி செம்மண் தேரி பகுதியை கொண்டது ஆகும்.இதே ஊராட்சியை சார்ந்த காமராஜர் நகர் -நம்மாழ்வார்நகர்-கட்டாலங்குளம் சாலை பகுதியில் தற்போது பல்வேறு குடியிருப்புகள் ,விவசாய தோட்டங்கள் உள்ளது.கடந்த நான்கு நாளாக இப்பகுதியில் உள்ள தோட்டத்தில் திடிரென்று தீ பிடித்தது.காற்று அதிகம் வீசும் காலம் ஆனதால்  அருகில் உள்ள பனை மரம் மற்றும் மான்காதுவேல் செடிகள் கொழுந்து விட்டு எரிந்து இப்பகுதி முழுவதும் பரவ ஆரம்பித்தது.  தீயணைப்பு துறை அதிகாரிகள் வந்து அணைத்த நிலையில் 30/6/2025 திங்கள் கிழமை  மாலை வேளையில்  அதிகமாக பரவ ஆரம்பித்தது. 

ஏற்கனவே திருச்செந்தூர் பகுதி கோவில் விழா என்பதனால் சுற்றுவட்டார தீயணைப்பு வண்டிகள் திருச்செந்தூர் பகுதிக்கு சென்றுவிட்டன. சிப்காட் வண்டி மட்டும் தீயை அணைத்து வந்தது. சுமார் இரவு 10 மணி அளவில் தீயின் வேகம் அதிகரித்தது. உடனடியாக இரவு 10 மணிக்கு முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கவனம் கொண்டு சென்றார் .உடனடியாக சண்முகையா எம்.எல்.ஏ நடவடிக்கையின் பேரில் இரவு தூத்துக்குடி மற்றும் திருவைகுண்டம் பகுதியில் இருந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்தது. 1/7/2025 அதிகாலை இரண்டு மணி வரை தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர். 

திரும்ப இன்று காலை சில பகுதிகள் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. மீண்டும்  சண்முகையா எம் எல் ஏ வை தொடர்பு கொண்டு  சென்றதன் பேரில் அவரின் தொடர் நடவடிக்கையால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தீயணைப்பு  அதிகாரிகளை தொடர்பு கொண்டு போர்கால அடிப்படையில்   நடவடிக்கையை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்களை பாராட்டி வருகின்றனர்.

 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement