திருச்செந்தூர் முருகன் கோயிலில் இரு அமைச்சர்கள் தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நான்காம் கால வேள்விச்சாலை பூஜையில் அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்
திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வருகின்ற 07.07.2025 அன்று வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்றையதினம் நடைபெற்ற நான்காம் கால வேள்விச்சாலை பூஜையில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் தலைமையில் கலந்துக்கொண்டு சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர். மேலும் கோவிலில் செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தக்கார் ஆர்.அருள்முருகன், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்