advertisement

ராமநாதபுரத்தில் புதியஆரம்ப சுகாதார நிலைய கட்டட திறப்பு விழா

ஜூலை 04, 2025 5:59 முற்பகல் |

ராமநாதபுரம்  பாத்திமா நகர் பகுதியில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்து விளக்கு ஏற்றினார்.

 தமிழ்நாடு முதலமைச்சரால் மருத்துவம் , மக்கள் நலவாழ்வுத்துறை சார்பில் மாநகராட்சி , நகராட்சிக்குட்பட்ட புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் , நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  
நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சரால் ராமநாதபுரம் நகராட்சி, பாத்திமா நகர் பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், ராமேஸ்வரம் நகராட்சி நடராஜபுரம் பகுதியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்தையும் காணொளிக்காட்சியின் மூலம் திறந்து வைத்தார்கள்.

அதனை யொட்டி, ராமநாதபுரம் நகராட்சி, பாத்திமா நகர் பகுதியில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்  ஆகியோர் சென்று புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள உட்கட்டமைப்புகளை பார்வையிட்டார்கள்.

நிகழ்ச்சியில், பொதுசுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் மரு.அர்ஜுன்குமார் , இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம் , ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் , நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வின் , நகர்நல அலுவலர் மரு.ரத்தினகுமார் , வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஜென்னத் யாஸ்மின் , நகர்மன்ற உறுப்பினர் கயல்விழி, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட மருத்துவ அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் .

 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement