தூத்துக்குடி செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500/- அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் தங்கச் செயினை பறித்துச் சென்ற வழக்கில் தூத்துக்குடி சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜெயகொடி மகன் வேல்மணி (40/25) மற்றும் சதாசிவம் மகன் பாரதிகுமார் (27/25) ஆகிய இருவரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. விஜய் ராஜ்குமார் அவர்கள் இன்று (10.07.2025) குற்றவாளிகளான வேல்மணி மற்றும் பாரதிகுமார் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன்,விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர், முருகன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
கருத்துக்கள்