advertisement

தூத்துக்குடி போக்குவரத்து காவல் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி., ஆய்வு

டிச. 16, 2025 3:52 முற்பகல் |

 

தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று (15.12.2025) தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

மேலும் மேற்படி போக்குவரத்து பிரிவு காவல் நிலைய போலீசாரிடம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சி. மதன்உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
 
மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஆல்பர்ட் ஜான்  புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை (Kit Inspection) பார்வையிட்டும், அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement