பாஜக., சார்பில் எஸ்ஐஆர் பயிலரங்கம்
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் மற்றும் மாநாடு தூத்துக்குடி நகரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் சிறப்புரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் டி. ராஜா, அம்பாசமுத்திரம் சட்டமன்ற அமைப்பாளர் தங்கேஸ்வரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளை பூத் நிலை வரை கொண்டு சென்று, தகுதியுள்ள வாக்காளர்கள் யாரும் தவறவிடப்படாமல் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியசீலன், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர் வாரியார் சிவராமன் மாசாணம், மாவட்ட அலுவலக செயலாளர் இசக்கிமுத்து, மண்டல தலைவர்கள் லிங்க செல்வம், சுதா, ராஜேஷ், கனி, மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பயிலரங்கம் மற்றும் மாநாட்டில் மாநில நிர்வாகிகள், மாவட்ட அணி–பிரிவு, மண்டல நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





கருத்துக்கள்