advertisement

தூத்துக்குடி- கோவில் அறங்காவலா் குழு தலைவா்கள் கீதாஜீவனிடம் வாழ்த்து

ஜன. 28, 2026 5:08 முற்பகல் |

தூத்துக்குடி சிவன், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவா்கள் அமைச்சா் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா். 

தூத்துக்குடி பாகம்பிாியாள் உடனுறை சங்கரராமமேஸ்வரா் திருக்கோவில், வைகுண்டபதி பெருமாள் கோவில்கள் அறங்காவலா் குழு பதவி காலம் முடிந்தநிலையில் மீண்டும் இரண்டு கோவிலுக்கு அறங்காவலா்கள் நியமனம் செய்ய அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது. இதன் அடிப்படையில் மீண்டும் அறங்காவலா் குழுவாக அதே நபா்களை இரண்டு கோவிலுக்கும் நியமித்து அறநிலையைத்துறை உத்தரவிட்டது. 

இந்நிலையில் வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர்  தோ்தலை உதவி ஆணையா் சுப்புலட்சுமி நடத்தினாா். ஏற்கனவே வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவராக இருந்த செந்தில்குமாா், மீண்டும் அறங்காவலா் குழு தலைவராக அறங்காவலா்களால் ஓரு மனதாக தோ்வு செய்யப்பட்டாா். பின்னா் தலைவர் செந்தில்குமாா் மற்றும் அறங்காவலா்கள் மந்திரமூா்த்தி, முருகேஸ்வாி, மகேஸ்வரன், பாலசங்கா், ஆகியோருக்கு தனித்தனியாக சான்றிதழ் வழங்கப்பட்டது.

அறங்காவலா் குழு தலைவர் தோ்தலையும் தனித்தனியாக அறநிலையத்துறை உதவி ஆணையா் கூடுதல் பொறுப்பு சுப்புலட்சுமி நடத்தினாா்.  சிவன்கோவில் அறங்காவலா் குழு தலைவராக ஏற்கனவே இருந்த கந்தசாமி, மீண்டும் அறங்காவலா்களால் ஓரு மனதாக ஓட்டெடுப்பு மூலம் தோ்வு செய்யப்பட்டாா். பின்னா் தலைவர் கந்தசாமி மற்றும் அறங்காவலா்கள் ஆறுமுகம், இளங்குமரன், சாந்தி, ஜெயலட்சுமி, ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா் சிவன்கோவில் அறங்காவலா் குழு தலைவர் கந்தசாமி உள்பட அறங்காவலா்கள் பூங்கொத்து சால்வை கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனா். அமைச்சா் கீதாஜீவன் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை நல்லமுறையில் செய்து அரசுக்கும் ஆட்சிக்கும் நல்ல பெயரை எடுத்துக்கொடுக்கும் வகையில் தாங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.  கல்யாணசுந்தரம், மணி உடனிருந்தனா்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement