தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி ? - உதயநிதி ஸ்டாலின் பதில்
மார். 07, 2026 7:20 முற்பகல் |
2026 சட்டமன்ற தேர்தலில் தலைவர் என்ன முடிவெடுக்கிறாரோ நான் அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். சொல்லாத வாக்குறுதிகளையும் செய்துள்ளோம். மேலும் நாங்கள் மக்களுடன் களத்தில் உள்ளோம்.
மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் என்பது 2000 ரூபாய் உயர்த்தி கொடுக்கப்படும் என்று சொல்லி உள்ளனர் இந்த நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தலைவர் என்ன முடிவெடுக்கிறாரோ நான் அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்றார்.





கருத்துக்கள்