advertisement

குற்றவாளிகளை கைது செய்வதில் முதலமைச்சர் உறுதி - அமைச்சர் கீதாஜீவன்

மார். 13, 2026 4:41 முற்பகல் |

 

​தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பள்ளி மாணவி படுகொலை தொடர்பாகச் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்தார். 

​தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தை சேர்ந்த பள்ளி மாணவி உடல் காட்டில் கிடைக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உடனே நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.இதில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது "உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்; எனவே, காவல்துறை விசாரணைக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement