advertisement

தூத்துக்குடி மாநகராட்சி பணிகளை மேயா் ஆய்வு

மார். 13, 2026 5:04 முற்பகல் |

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேயா் ஜெகன் பொியசாமி எடுத்து வருகின்றாா்.  அதன் ஒரு பகுதியாக மாநகர மக்களின் உடல் நலத்தினையும் கருத்தில் கொண்டு சுந்தரவேல்புரம் பகுதியில் நடைபெற்று வரும் செயற்கை புல்வெளி பூங்கா பணிகளையும், கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகளையும் மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டும்       மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாம் கேட் பகுதியிலுள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தாா். பகுதிசெயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர் ரவீந்திரன், உள்பட பலர் உடனிருந்தனா்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement