பொட்டலூரணியில் மாதக் கூடல் போராட்டம்!
தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணி பகுதியிலுள்ள கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி 668வது நாளாகத் அதன் மாதக் கூடல் போராட்டம் பொட்டலூரணியில் நடைபெற்றது. பொட்டலூரணி பகுதியிலுள்ள கழிவுமீன் நிறுவனங்களை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த ஐந்தாண்டுகளாக அவ்வப்போதும், இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். நாள் கூடல், மாதக் கூடல் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் எனப் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி இந்த மாதத்திற்கான மாதக்கூடல் போராட்டம் பொட்டலூரணியில் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்றது போராட்டக்குழுவின் பொறுப்பாளர்கள் இராதாகிருஷ்ணன், ஈஸ்டர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைப் பொறுப்பாளர் சண்முகம் வரவேற்புரையாற்றினார்.
வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வைகுண்டமாரி தமிழ்த் தேசியப் பேரவைப் பொறுப்பாளர் மணிமாறன். சமூக ஆர்வலர் பிரபா ஆகியோா் சிறப்புரையாற்றினார். கழிவுமீன் நிறுவனங்கள் மூடப்படவேண்டும், பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும், பொட்டலூரணி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற குறை தீர்ப்புநாள் மனுவில் கோரியவாறு, மாவட்டகலெக்டர் சமாதானக் கூட்டம் நடத்த வேண்டும் எனப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பாலமுருகன் நன்றி கூறினார்.





கருத்துக்கள்