advertisement

திமுக மட்டுமே மக்களுக்காக பணியாற்றுகிறது: அமைச்சர் கீதாஜீவன்

மார். 13, 2026 6:23 முற்பகல் |

 


மக்களோடு மக்களாகப் பணியாற்றுவது திமுக மட்டுமே என்று தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார். 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 73-வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 48-வது வார்டு கால்டுவெல் காலனியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, வட்டச் செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். மாமன்ற உறுப்பினர் (கவுன்சிலர்) ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் சுமார் 1500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் பேசியதாவது: உங்களில் ஒருவராக இருந்து தமிழக முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். மக்களோடு மக்களாக இருந்து எப்போதும் பணியாற்றுவது திமுக தான்.

'விடியல் பயணம்' திட்டம் பெண்களின் பொருளாதாரத் தடையை நீக்கி, அவர்களுக்குப் மிகப்பெரிய சுதந்திரத்தைத் தந்துள்ளது. 33 சதவீத இடஒதுக்கீடு மூலமே நான் 1996-ல் ஊராட்சி உறுப்பினராகத் தேர்வாகி, இன்று அமைச்சராக 30 ஆண்டுகால பொதுவாழ்வில் உங்களோடு பயணிக்கிறேன். மகளிர் உரிமைத் தொகை தற்போது 1000 வழங்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு இது 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

14 வயதில் கொடி பிடிக்கத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகத்தை முதலமைச்சர் மாற்றியுள்ளார். வரவுள்ள தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். என தெரிவித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement