advertisement

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

ஜூன் 01, 2026 5:31 முற்பகல் |

 

தற்போது, செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதால், முன்பதிவு பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால், ரெயிலில் உள்ள 18 பெட்டிகளை 23 பெட்டிகளாக அதிகரிக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது.

அதன்படி, வரும் 15-ந் தேதி முதல் சென்னையில் இருந்தும், 16-ந் தேதி முதல் திருசெந்தூரில் இருந்தும் நிரந்தரமாக 5 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், 2 மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளும் இணைக்கப்படுகின்றன.

இதன் மூலம் 400 பயணிகள் வரை கூடுதலாக முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இதனால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement