advertisement

முதல்வர் விஜய் குறித்து கடும் விமர்சன பேச்சு: மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது

ஜூலை 20, 2026 4:31 முற்பகல் |

 

தமிழக முதலமைச்ச ர்விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் விமர்சித்துப் பேசிய விவகாரத்தில், திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சனிக்கிழமை அன்று திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தற்போதைய தமிழக முதல்வர் விஜய் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசினாராம். தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும் விமரிசித்தும் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தாலுகா காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மார்க்கண்டேயன் வசிக்கும் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற காவல் துறையினர், அவரைக் கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement