advertisement

மறைந்த போப் உடலுக்கு 2 தமிழக அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

ஏப். 26, 2025 11:12 முற்பகல் |

மறைந்த உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ் உடலுக்கு ரோம் நகர் வாடிகன் சென்று அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இருதயராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ் உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்ததும் மிகவும் வேதனையடைந்தார்.அதனைத் தொடர்ந்து விடுத்த இரங்கல் செய்தியில் “பரிவோடும் முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கச் திருச்சபையினை வழிநடத்தி பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ரோம் நகர் வாடிகன் சென்று அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இருதயராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement