advertisement

ஈரான் பந்தர் அப்பாஸ் துறைமுக வெடி விபத்து -உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு...!

ஏப். 30, 2025 3:29 முற்பகல் |


  
ஈரான் நாட்டின் மிகவும் பரபரப்பு மிகுந்த துறைமுகமான 'பந்தர் அப்பாஸ்', பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த மிகப்பெரிய துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும்.

மேலும், எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நின்ற ஒரு கன்டெய்னர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் அப்பகுதி முழுதும் சேதமடைந்து, போர்க்களம் போல காட்சி அளித்தது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என காவலர்களின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையே, படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மேலும் பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வெடிவிபத்து குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement