advertisement

நெஸ்லே நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு

ஜன. 08, 2026 7:07 முற்பகல் |


 
 நெஸ்லே வெளியிட்டுள்ள விளக்கத்தில், பால் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கிய மூலப்பொருள் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும், அந்த தயாரிப்புகளில் குமட்டல், வாந்தி, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பால் பொருட்களில் நச்சுப்பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஃபார்முலா பால் தயாரிப்புகளை வாபஸ் பெறும் முடிவை நெஸ்லே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த பால் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அவற்றை திருப்பி அளித்து முழுமையான பணத்தை மீட்டுப் பெறலாம் என்றும், அதற்கான வழிகாட்டுதல் மற்றும் நடைமுறைகளை நெஸ்லே நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான இந்த விவகாரம், பெற்றோர்களிடையே கவலை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement