advertisement

மார்ச் 29 ல் கம்பன் விழா - பட்டிமன்றம் நடைபெறுகிறது

மார். 27, 2026 6:55 முற்பகல் |


 
இந்தியா போபால் கம்பன் கழக ம் கதிரவன் கலைக் கழகமும் இணைந்து மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம் மட்டக்களப்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 29 காலை 9மணி முதல் இரவு 6 மணிவரை இலங்கை. கம் பவாரிதி ஜெயராஜ் ஆசியுடன் கம்பன் விழா இரு அமர்வுகளாக நடைபெறவுள்ளது. 

இதில் கம்பராமாயணத்தில் மேலோங்கி நிற்பதுஉறவா? நட்பா? எனும் தலைப்பிலான பட்டி மன்றத்துக்கு கதிரவன் த.இன்பராசா நடுவராகச் செயற்படவுள்ளார். அத்துடன் கதிரவன் கலைக் கழகத்தினர் பங்கேற்கும் விசேட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.இந்நிகழ்வில் இந்தியா உட்பட பல பகுதி களிலிருந்தும் பிரபலமான தமிழ் சான்றோர் களும் ஆன்றோர்களும் சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக் கவுள்ளனர். போபால் கம்பன் கழகம் தலைவர் முனைவர் கா.பா.சௌந்தர்ராஜன் மற்றும் அதன் செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதோடு கதிரவன் த. இன்பராசா மற்றும் கதிரவன் உறவுகள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement