ஒடிசா : வீட்டு உரிமையாளரின் மனைவி, மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வேலைக்காரர்!
வீட்டு உரிமையாளரின் மனைவி மற்றும் மகளையும் அவர்களுக்கு தெரியாமலேயே வேலைக்காரர் ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் படகாடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரோஜ் குமார் என்பவர் வேலை செய்து வந்தார்.அந்த வீட்டின் உரிமையாளருக்கு திருமணமாகி மனைவியும், பள்ளியில் படிக்கும் மகளும் உள்ளனர்.இந்தநிலையில் வீட்டு உரிமையாளரின் மனைவி மற்றும் மகளையும் அவர்களுக்கு தெரியாமலேயே வேலைக்காரர் ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.
வேலைக்காரர் சரோஜ்குமார் ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்ததுடன் அவர்களை மிரட்டி அவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி அவர்கள் இருவரையும் பல நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் ஒருகட்டத்தில் சரோஜ் குமாரின் தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த வீட்டு உரிமையாளரின் மனைவி, நடந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வேலைக்காரர் சரோஜ் குமாரை கைது செய்தனர்.
கருத்துக்கள்