சென்னையில் மதுபோதையில் மாடியில் தூங்கிய இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு
சென்னையில் அதிக மதுபோதையில் வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிய இளைஞர் ஒருவர் தூக்கதில் உருண்டு கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
சென்னை சூளைமேட்டில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு வளைகாப்பு விழாவிற்காக, கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பினேஷ் என்பவர் வந்துள்ளார். இவர், விழாவில் போது மது அருந்திவிட்டு வீட்டின் 02-வது மாடியில் தூங்கியுள்ளார்.
மதுபோதையில் இவர் இருந்துள்ளதால் இரண்டாம் மாடியில் இருந்து உருண்டு படுத்ததில், தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலன்றி பினேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சூளைமேடு போலீசார், விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சூளை மேடு பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
கருத்துக்கள்