தூத்துக்குடியில் படகு ஓட்டுநர் உரிமம் சான்றிதழ் பயிற்சி துவக்கம்!
தூத்துக்குடியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி இன்று தொடங்கியது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையானது, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் நடத்தும் ‘‘படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி" என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியானது மே 5 முதல் மே 12 வரை நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழாவானது 05.05.2025 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் வைத்து நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 21 விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் த. ரவிக்குமார் வரவேற்புரை மற்றும் பயிற்சி விளக்கவுரையாற்றினார்.
கருத்துக்கள்