எட்டயபுரத்தில் புதிய ரேஷன்கடை திறப்பு
மே 05, 2025 12:43 பிற்பகல் |
எட்டயபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பேரூராட்சி, 11-வது வார்டில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டிடத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்கண்டேயன் தலைமையில் திறந்து வைத்தார்.விழாவில் நிகழ்வில் எட்டையாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்