டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 4 தேர்வுகளுக்கு இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-I மற்றும் தொகுதி - IV ஆகிய தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வு குறிப்பிட்டுள்ள தேதிகளில் நடைபெறவுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-I க்கான தேர்வு 15.06.2025 அன்றும் மற்றும் தொகுதி IV -க்கான தேர்வு 12.07.2025 அன்றும் நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மெய்நிகர் கற்றல் வலைதளம் (Virtual Learning Portal) மூலம் கட்டணமில்லா Online பாடவாரியான தேர்வுகள் (Free test series) நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகளான தொகுதி I தேர்வுக்கு 05.05.2025, 09.05.2025, 12.05.2025, 15.05.2025, 21.05.2025 ஆகிய தேதிகளில் Online மாதிரித் தேர்வுகளும், தொகுதி IV தேர்வுக்கு 05.05.2025 முதல் 17.06.2025 வரை 12 Online மாதிரித் தேர்வுகளும் நடைபெறவுள்ளது.
இத்தேர்வுகளுக்கான வினாக்கள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு மாநில அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் கலந்து https://tamilnaducareerservices.tn.gov.in/அடிப்படை விவரங்களை virtual learning portal லில் உட்செலுத்தி (Login) பதிவை உறுதி செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும், கூடுதல் விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் Thoothukudi Employment office என்ற Telegram Channel வாயிலாகவும், 0461 2003251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகளான தொகுதி - I மற்றும் தொகுதி IV தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த ஆன்லைன் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்