advertisement

4 நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி  - டெல்லியில் இபிஎஸ் பேட்டி

மார். 20, 2026 5:36 முற்பகல் |


 
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் நேற்று இரவு மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
 

தேர்தல் வேலைகள் இருப்பதால் அமித்ஷாவை பார்க்க வந்தேன். அவருடன் தமிழ்நாடு அரசியல் குறித்து பேசினேன். நான்கைந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. எனவே நான் வந்து அவரை பார்த்துள்ளேன்.
 
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. கூட்டணியில் சேரவேண்டிய கட்சிகள் சேர்ந்துள்ளன. தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை. இதை அவர்களும் சொல்லி விட்டனர். இன்னும் 4 நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். எந்த கட்சிகளுக்கு எங்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அந்தந்த இடங்கள் ஒதுக்கப்படும். ஒரு வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement